Posts

Featured post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!

Image
  🇱🇰 Ceylon News 24 🇱🇰  01 02 2021  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உள்ளிட்ட உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்தவற்காக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐவர் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.  ஒன்றரை வருடக்காலமாக சுமார் 650 நபர்களிடம் சாட்சியம் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றன.  அதன்படி, குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளத...

கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை, குத்தகைக்கு வழங்குவதும் இல்லை – பிரதமர்

Image
  🇱🇰 Ceylon News 24 🇱🇰  31 01 2021  கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை, குத்தகைக்கு வழங்குவதும் இல்லை – பிரதமர் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவ்விதத்திலும் வௌிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் குற்றச்சாட்டுவதற்குரிய தேவை யாருக்கும் கிடையாது எனவும் கிழக்கு முனையம் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  தமது தீர்மானம் குறித்து துறைமுக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  ஆகவே, இதற்கான பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளதாகவும் பிரதமர...

மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

Image
🇱🇰 Ceylon News 24 🇱🇰  31 01 2021  மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை! இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.  இதற்கமைய, 2 தசம் 5 மில்லியன் AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயளாலர் வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ சி சில்வா தெரிவித்துள்ளார்.  இதன்படி, குறித்த தடுப்பூசிகளை எதிர்வைரும் ஒரு மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், 3 தசம் 5 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அமல் ஹர்ஷ சி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை, இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி தற்போது சுகாதார பணியாளர்க, முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசால...

நுவரெலியாவில் நிலநடுக்கம் !!

Image
  🇱🇰 Ceylon News 24 🇱🇰  31 01 2021  NEWS ALERT நுவரெலியாவில் நிலநடுக்கம்  நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.  இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

29 012021 WORLD NEWS 🔰சர்வதேச ரீதியில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளது

Image
🇱🇰 Ceylon News 24 🇱🇰  29 012021  WORLD NEWS 🔰சர்வதேச ரீதியில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளது சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளது.  சர்வதேச நாடுகளில் நேற்றைய நாளில் மாத்திரம் 16 ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன்படி, அமெரிக்காவிலேயே அதிக ஊயிரிழப்புகள் பதிவாகி வருகின்ற நிலையில், அந்த நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 908 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன், பிரேஸிலில் ஆயிரத்து 432 பேரும், பிரித்தானியாவில் ஆயிரத்து 239 பேரும் நேற்றைய நாளில் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்து 2 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.  இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியே, 21 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.  🔰இந்தியாவில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு! இந்தியாவில் தலைநகர் பு...

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.29 01 2021

Image
  🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  29 01 2021  நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 753 பேர் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.  இதன்படி இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.  இதற்கமைய குறித்த காலப்பகுதியில் கட்டார் தோஹா நகரிலிருந்து 80 பேரும் டுபாயில் இருந்து 68 பேர் உட்பட மொத்தமாக 258 பேர் நாடுதிரும்பியுள்ளனர்.  மேலும் 8 விமானங்கள் ஊடாக 495 பேர் குறித்த காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.

பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

Image
Ceylon news  🇱🇰 Ceylon News 24 🇱🇰  29 01 2021  UPDATE பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்! பாணந்துறை பல்லேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநகபர்கள் குறித்த நபரை கொலை செய்வதற்காக 7 நாட்களுக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கொலையாளிகளுக்கு குறித்த வீட்டை வாடகைக்கு விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.  கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் மொரடுவையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற முச்சக்கரவண்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றனர்.  இதன்போது, முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் உயிரிழந்திருந்தார்.  இதேவேளை, குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி ஒன்றும் 16 தோட்டாங்களும் மற்றும் மெகசின் ஒன்றும் பாணந்துறை வந்...