பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!
![]() |
| Ceylon news |
🇱🇰 Ceylon News 24 🇱🇰
29 01 2021
UPDATE
பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!
பாணந்துறை பல்லேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநகபர்கள் குறித்த நபரை கொலை செய்வதற்காக 7 நாட்களுக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகளுக்கு குறித்த வீட்டை வாடகைக்கு விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் மொரடுவையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற முச்சக்கரவண்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி ஒன்றும் 16 தோட்டாங்களும் மற்றும் மெகசின் ஒன்றும் பாணந்துறை வந்துராமுல்லை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment