நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.29 01 2021

 



🇱🇰 *Ceylon News* 24 🇱🇰 


29 01 2021 


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 753 பேர் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 


இதன்படி இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 


இதற்கமைய குறித்த காலப்பகுதியில் கட்டார் தோஹா நகரிலிருந்து 80 பேரும் டுபாயில் இருந்து 68 பேர் உட்பட மொத்தமாக 258 பேர் நாடுதிரும்பியுள்ளனர். 


மேலும் 8 விமானங்கள் ஊடாக 495 பேர் குறித்த காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.

Comments

Popular Posts

காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!!27 01 2021

3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு 11/01/2021 Today news

கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 25 01 2021 Today News