கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 25 01 2021 Today News


GET MORE DAILY NEWS UPDATES CLICK HERE



CORONA UPDATE 🇱🇰


கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 


கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார தொற்றை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. 


இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 480 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இதில் நாரயேன்பிட்ட, வெள்ளப்பிட்டிய, மவுண்லெவேனியா ஆகிய பகுதிகளில் தலா 29 பேரும், வெள்ளவத்தை பகுதியில் 22 பேரும், கொம்பனித்தெரு மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் தலா 20 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 86 பேரும், கண்டி மாவட்டத்தில் 35 பேரும் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


மேலும், களுத்துறை மாவட்டத்தில் 72 பேரும், காலி மாவட்டத்தில் 40 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 16 பேரும், மாத்தறை 17 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இதன்படி, நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 843 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 841 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 02 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. 


அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 529 ஆக காணப்படுகிறது. 


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 


இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் தொற்று ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன. 


மேலும் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 


இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், இரத்தம் விஷமடைந்தமை மற்றும் இருதய நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன 



அத்துடன் கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். 


இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் இரத்தம் விஷமடைந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன. 


இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது. 


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது. 


இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 463 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 783 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதேவேளை, முப்படையினராலும் நடாத்திச்செல்லப்படும் 94 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7 ஆயிரத்து 812 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய நாளில் மாத்திரம் 17 ஆயிரத்து 523 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Comments

Popular Posts

காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!!27 01 2021

3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு 11/01/2021 Today news