3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு 11/01/2021 Today news




🇱🇰 *Ceylon News* 24 🇱🇰 


11 01 2021 


3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு


மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின 9 வான்கதவுகள் இன்று (11) திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நகரட்ணம் தெரிவித்தார். 


கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றதையடுத்து குளங்களில் நீர் நிறம்ப ஆரம்பித்துள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. 


உன்னிச்சைகுளம் 33 அடி நீர் கொள்வனவு செய்யக்கூடியதும், நவகிரிகுளம் 31 அடி நீர் கொள்வனவு செய்யக்கூடியதும், றுகம்குளம் 15 அடி 18 அங்குலம் நீர் கொள்வனவு செய்யக்கூடிய குளங்கள் ஆகும். 


இருந்த போதும் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து தேவையற்ற நீரை வெயளியேற்ற வேண்டியதையடுத்து இந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Comments

Post a Comment

Popular Posts

காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!!27 01 2021

கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 25 01 2021 Today News