ரஷ்யாவில் மேலும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்!Today news 11/01/2021
🇱🇰 *Ceylon News* 24 🇱🇰
11 01 2021
*WORLD NEWS*
ரஷ்யாவில் மேலும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்!
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 ஆயிரத்து 315 பேர் புதிதாக அடையாளம் காணப்ப்ட்டுள்ளனர்.
இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 34 இலட்சத்து 25 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 436 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 273 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடனுக்கு இரண்டாவது தடவையாக கொரோனா தடுப்பூசி!
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இன்று இரண்டாவது தடவையாக கொரோனா தடுப்பூசியினை பெறவுள்ளார்.
இதேவேளை 78 வயதான ஜோ பைடன் கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர் முதற்தடவையாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டமை அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அமெரிக்காவில் Pfizer மற்றும் Moderna தடுப்பூசி பயன்பாட்டிற்குள் அமெரிக்க அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரேசிலின் அமேசன் மாநிலத்தில் புதியவகை வைரஸ் தொற்று அடையாளம்!
பிரேசிலின் அமேசன் மாநிலத்தில் புதியவகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வைரஸ் வகையில் இருந்து வேறுபட்ட வைரஸ் பரவலாக இது காணப்படுவதாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பிரேசில் பிரஜைகள் எவருக்கு இதுவரை குறித்த புதியவகை தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான ரஷ்ய பிரஜை ஒருவர் அடையாளம்!
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான ரஷ்ய பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ரஷ்ய பிரஜை அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே பிரித்தானியாவுக்கான விமான சேவையினை ரஷ்யா கடந்தவாரம் முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment