குடியரசு தினத்தில்50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி – பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்
🇱🇰 *Ceylon News* 24 🇱🇰
26 01 2021
WORLD NEWS
🔰குடியரசு தினத்தில்50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி – பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்
இந்தியாவின் – டெல்லி மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகளால் பாரிய எதிர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்தும், அதானி உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் இன்றைய தினம் உழவு இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட பேரணியில், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸாருன் மேற்கொள்ளப்பட்ட சுமுகமான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் பொலிஸாரின் வாகனங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
*🔰அமெரிக்காவில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம்!*
அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் ஆயிரத்து 897 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் இதுவரை இரண்டு கோடி 58 லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔰கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு 5 வருடங்கள் ஆகுமா? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் விளக்கம்*
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு சுமார் 4 முதல் 5 வருடங்கள் ஆகும் என சிங்கப்பூர் கல்வி அமைச்சர் Lawrence Wong தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் கொள்கை ஆய்வு நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த காலப் பகுதிக்குள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உலகம் இன்னும் பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியம் காணப்படுவதாகவும், Lawrence Wong சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a Comment