மருதமுனையில் கரைவலை தோணிக்கு சுமார் 5000 சூரை மீன்கள் பிடிபட்டன!






மருதமுனையில் கரைவலை தோணிக்கு சுமார் 5000 சூரை மீன்கள் பிடிபட்டன!

மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) கரைவலை தோணிகள் இரண்டிற்ற்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சூரை மீன்கள் பிடிபட்டன. சூரை மீன் ஒன்றின் நிறை மூன்று அல்லது மூன்றரை கிலோ எடை உடையதாக காணப்பட்டன.


இதனால் ஒரு சூரை மீன் 600 ரூபாய் தொடக்கம் 800 ரூபாய்கள் வரை மிகவும் மலிவான விலையில் குறித்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டன.  பொதுமக்கள் குறைந்த விலையில் மீன்களை கொள்வனவு செய்து கொண்டதுடன் கடற்கரை மற்றும் பிரதான வீதிகளை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.


குறித்த கரைவலை மீன்பிடியாளர்கள்  லட்சக்கணக்கான ரூபாய்க்கு இந்த மீன்களை விற்பனை செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts

காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!!27 01 2021

3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு 11/01/2021 Today news

கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 25 01 2021 Today News