Posts

Showing posts from January, 2021

கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை, குத்தகைக்கு வழங்குவதும் இல்லை – பிரதமர்

Image
  🇱🇰 Ceylon News 24 🇱🇰  31 01 2021  கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை, குத்தகைக்கு வழங்குவதும் இல்லை – பிரதமர் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவ்விதத்திலும் வௌிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் குற்றச்சாட்டுவதற்குரிய தேவை யாருக்கும் கிடையாது எனவும் கிழக்கு முனையம் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  தமது தீர்மானம் குறித்து துறைமுக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  ஆகவே, இதற்கான பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளதாகவும் பிரதமர...

மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

Image
🇱🇰 Ceylon News 24 🇱🇰  31 01 2021  மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை! இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.  இதற்கமைய, 2 தசம் 5 மில்லியன் AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயளாலர் வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ சி சில்வா தெரிவித்துள்ளார்.  இதன்படி, குறித்த தடுப்பூசிகளை எதிர்வைரும் ஒரு மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், 3 தசம் 5 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அமல் ஹர்ஷ சி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை, இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி தற்போது சுகாதார பணியாளர்க, முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசால...

நுவரெலியாவில் நிலநடுக்கம் !!

Image
  🇱🇰 Ceylon News 24 🇱🇰  31 01 2021  NEWS ALERT நுவரெலியாவில் நிலநடுக்கம்  நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.  இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

29 012021 WORLD NEWS 🔰சர்வதேச ரீதியில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளது

Image
🇱🇰 Ceylon News 24 🇱🇰  29 012021  WORLD NEWS 🔰சர்வதேச ரீதியில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளது சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளது.  சர்வதேச நாடுகளில் நேற்றைய நாளில் மாத்திரம் 16 ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன்படி, அமெரிக்காவிலேயே அதிக ஊயிரிழப்புகள் பதிவாகி வருகின்ற நிலையில், அந்த நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 908 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன், பிரேஸிலில் ஆயிரத்து 432 பேரும், பிரித்தானியாவில் ஆயிரத்து 239 பேரும் நேற்றைய நாளில் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்து 2 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.  இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியே, 21 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.  🔰இந்தியாவில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு! இந்தியாவில் தலைநகர் பு...

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.29 01 2021

Image
  🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  29 01 2021  நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 753 பேர் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.  இதன்படி இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக 16 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.  இதற்கமைய குறித்த காலப்பகுதியில் கட்டார் தோஹா நகரிலிருந்து 80 பேரும் டுபாயில் இருந்து 68 பேர் உட்பட மொத்தமாக 258 பேர் நாடுதிரும்பியுள்ளனர்.  மேலும் 8 விமானங்கள் ஊடாக 495 பேர் குறித்த காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.

பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

Image
Ceylon news  🇱🇰 Ceylon News 24 🇱🇰  29 01 2021  UPDATE பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்! பாணந்துறை பல்லேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநகபர்கள் குறித்த நபரை கொலை செய்வதற்காக 7 நாட்களுக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கொலையாளிகளுக்கு குறித்த வீட்டை வாடகைக்கு விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.  கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் மொரடுவையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற முச்சக்கரவண்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றனர்.  இதன்போது, முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் உயிரிழந்திருந்தார்.  இதேவேளை, குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி ஒன்றும் 16 தோட்டாங்களும் மற்றும் மெகசின் ஒன்றும் பாணந்துறை வந்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

Image
🇱🇰 Ceylon News 24 🇱🇰  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஏனைய நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு

Image
LANKA NEWS 🇱🇰 Ceylon News 24 🇱🇰  27 01 2021  சீனாவில் இருந்து 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.  Sinopharm என்ற தடுப்பூசியே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!!27 01 2021

Image
GET MORE NEWS UPDATES CLICK HERE 🇱🇰 Ceylon News 24 🇱🇰  27 01 2021  காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா! 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில், காலி மாவட்டத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, காலி மாவட்டத்திற்கு உட்பட்ட 26 பாடசாலைகளில் இருந்து குறித்த மாணவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட பிராந்திய தொற்று நோய் விசேட நிபுணர் வேனுர கே சிங்கராச்சி தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று வரையான 14 நாட்களில் 38 மாணவர்கள் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

குடியரசு தினத்தில்50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி – பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்

 🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  26 01 2021  WORLD NEWS 🔰குடியரசு தினத்தில்50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி – பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் இந்தியாவின் – டெல்லி மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகளால் பாரிய எதிர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்தும், அதானி உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், டெல்லியில் இன்றைய தினம் உழவு இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட பேரணியில், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  இதனையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பொலிஸாருன் மேற்கொள்ளப்பட்ட சுமுகமான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் பொலிஸாரின் வாகனங்களை முற்றுகையிட்டுள்ளனர்.  இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்க...

மருதமுனையில் கரைவலை தோணிக்கு சுமார் 5000 சூரை மீன்கள் பிடிபட்டன!

Image
மருதமுனையில் கரைவலை தோணிக்கு சுமார் 5000 சூரை மீன்கள் பிடிபட்டன! மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) கரைவலை தோணிகள் இரண்டிற்ற்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சூரை மீன்கள் பிடிபட்டன. சூரை மீன் ஒன்றின் நிறை மூன்று அல்லது மூன்றரை கிலோ எடை உடையதாக காணப்பட்டன. இதனால் ஒரு சூரை மீன் 600 ரூபாய் தொடக்கம் 800 ரூபாய்கள் வரை மிகவும் மலிவான விலையில் குறித்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டன.  பொதுமக்கள் குறைந்த விலையில் மீன்களை கொள்வனவு செய்து கொண்டதுடன் கடற்கரை மற்றும் பிரதான வீதிகளை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. குறித்த கரைவலை மீன்பிடியாளர்கள்  லட்சக்கணக்கான ரூபாய்க்கு இந்த மீன்களை விற்பனை செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் சம்பவம்...!In Sri Lanka - On, January 25, 2021

Image
Click here to Get more News in daily   அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் சம்பவம்...! In Sri Lanka - On, January 25, 2021  அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் உள்ள *அலிகம்பே சந்தியில் இந்த* விபத்துச் சம்பவம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது.  சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று மீது பின்னால் வந்த டிப்பர் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிப்பர் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  இந்த விபத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதிய டிப்பர் வாகனம் சாலையை விட்டு விலகி பழத்தினுள் கவிழ்ந்தது.  இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேற்கொண்டுவருகின்றனர்.

கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 25 01 2021 Today News

Image
GET MORE DAILY NEWS UPDATES CLICK HERE CORONA UPDATE 🇱🇰 கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்…  கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார தொற்றை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.  இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 480 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதில் நாரயேன்பிட்ட, வெள்ளப்பிட்டிய, மவுண்லெவேனியா ஆகிய பகுதிகளில் தலா 29 பேரும், வெள்ளவத்தை பகுதியில் 22 பேரும், கொம்பனித்தெரு மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் தலா 20 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 86 பேரும், கண்டி மாவட்டத்தில் 35 பேரும் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  மேலும், களுத்துறை மாவட்டத்தில் 72 பேரும், காலி மாவட்டத்தில் 40 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 16 பேரும், மாத்தறை 17 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதன்படி, நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 843 பேர் அடையாளம் காண...

வாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Image
 🤝WAKE UP SRI LANKA 🇱🇰 வாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! 💢அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது.  💢இதனடிப்படையில் மக்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள உதவும் வகையில் வட்ஸ்அப்பை உருவாக்க அதிக முயற்சி செய்துவருவதாகத் தெரிவித்துள்ள வட்ஸ்அப் நிறுவனம், தமது நிறுவனத்தின் கொள்கை புதுப்பிப்பு நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான செய்திகளின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்க விரும்புகிறோம்எ னத் தெரிவித்துள்ளது.  💢மேலும், இந்த குறித்த செயலியின் மாற்றங்களில் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புவது தொடர்பான மாற்றங்கள் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  💢மேலும் தரவை எவ்வாறு சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் வெளிப்படைத்தன்மையை நிறுவனம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  💢அத்துடன், தனிப்பட்ட செய்தியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, 💢தனிப்பட்ட செய்திகளை நிறுவனத்தினால் பார்க்கவோ அல்லது உங்க...

BREAKING NEWS 👉வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்! உண்மையான தகவல்கள்

Image
  BREAKING NEWS  ⛔நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது.  ⛔வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.  👉வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்!  ⛔பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்.  ⛔பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும்.  ⛔வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம்.  🪀வாட்ஸ்அப் நிறுவனம்🪀

3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு 11/01/2021 Today news

Image
🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  11 01 2021  3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின 9 வான்கதவுகள் இன்று (11) திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நகரட்ணம் தெரிவித்தார்.  கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றதையடுத்து குளங்களில் நீர் நிறம்ப ஆரம்பித்துள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.  உன்னிச்சைகுளம் 33 அடி நீர் கொள்வனவு செய்யக்கூடியதும், நவகிரிகுளம் 31 அடி நீர் கொள்வனவு செய்யக்கூடியதும், றுகம்குளம் 15 அடி 18 அங்குலம் நீர் கொள்வனவு செய்யக்கூடிய குளங்கள் ஆகும்.  இருந்த போதும் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து தேவையற்ற நீரை வெயளியேற்ற வேண்டியதையடுத்து இந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் மேலும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்!Today news 11/01/2021

Image
🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  11 01 2021  *WORLD NEWS*  ரஷ்யாவில் மேலும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்! ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 ஆயிரத்து 315 பேர் புதிதாக அடையாளம் காணப்ப்ட்டுள்ளனர்.  இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 34 இலட்சத்து 25 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன், ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 436 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன்படி, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 273 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஜோ பைடனுக்கு இரண்டாவது தடவையாக கொரோனா தடுப்பூசி! அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இன்று இரண்டாவது தடவையாக கொரோனா தடுப்பூசியினை பெறவுள்ளார்.  இதேவேளை 78 வயதான ஜோ பைடன் கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர் முதற்தடவையாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டமை அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.  அமெரிக்காவில் Pfizer மற்றும் Moderna தடுப்பூசி பயன்பாட்டிற்குள் அமெரிக்க அ...

ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள்🇱🇰 *Ceylon News* 24 🇱🇰

Image
  🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  11 01 2021  ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்படுகின்றது. இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளையடுத்தே இது உறுதிப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரோடு நெருங்கிய தொடர்புடையவரென அடையாளம் காணப்பட்டதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு பி.சீ.ஆர். பாிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட தலதா அத்துகோறள மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிப்பு! முஸ்லிம்களும் ஆதரவு.🇱🇰 *Ceylon News* 24 🇱🇰 11 01 2021

Image
🇱🇰 *Ceylon News* 24 🇱🇰  11 01 2021  மன்னார் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிப்பு! முஸ்லிம்களும் ஆதரவு. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் புரண ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். தனியார் போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை. மன்னார் நகரில் உள்ள பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட்டதோடு அரச திணைக்களங்கள் வழமை போல் செயல்பட்டன. மேலும் ...